Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கடப்பிதழ் கேட்டு முகைதீன் யாசின் மீண்டும் விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

கடப்பிதழ் கேட்டு முகைதீன் யாசின் மீண்டும் விண்ணப்பம்

Share:

Jana Wibawa திட்டத்தில் 20 கோடி வெள்ளி சட்டவிரோத பணம் மாற்றம் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின், தற்காலிகமாக தனது அனைத்துலக கடப்பிதழை கேட்டு, நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

மலேசியர் ஒருவர் தாய்லாந்தில் நடத்தும் உணவகம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் தற்போது நீதிமன்றத்தின் பிடியில் இருந்து வரும் தனது அனைத்துலக கடப்பிதழ் தற்காலிகமாக திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று முகைதீன் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

அந்த உணவகத்தின் உரிமையாளர் தமக்கு மிக நெருக்கமானவர் என்று தனது அப்பிடேவிட் மனுவில் முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

Related News