Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டான்ஸ்ரீ ஜோசப் குருப்பின் நல்லுடல் கோத்தா கினபாலுவை வந்தடைந்தது
தற்போதைய செய்திகள்

டான்ஸ்ரீ ஜோசப் குருப்பின் நல்லுடல் கோத்தா கினபாலுவை வந்தடைந்தது

Share:

கோத்தா கினபாலு, ஏப்ரல் 19-

மறைந்த பெர்சாத்து ரக்யாத் சபா- PBRS கட்சியின் தோற்றுநரும் சபாவின் முன்னாள் துணை முதலமைச்சருமான டான்ஸ்ரீ ஜோசப் குருப்பின் நல்லுடல் கோலாலம்பூரிலிருந்து நேற்று இரவு மணி 11.20 அளவில் கோத்தா கினபாலுவை வந்தடைந்தது.

இன்று மதியம் மணி 2 தொடங்கி இரவுமணி 8 வரையில், முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் ஜோசப் குருப்பின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தவுள்ளனர்.

79 வயதான அவர், நேற்று முன்தினம் தேசிய இருதய கழகத்தில் சிகிச்சைப் பலனின்றி காலமாகிய நிலையில் நேற்று காலையில் அவரது நல்லுடல் கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலுவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.

ஆயினும், இந்தோனேசியா, வட சுலவேசியிலுள்ள ருவாங் எரிமலை வெடிப்பு காரணமாக, இறுதி நேரத்தில் விமானப் பயணங்கள் ரத்து ஆனதால், நேற்று அவரது நல்லுடல் கோத்தா கினபாலுவுக்கு அனுப்ப முடியாமல் போனது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்