நாட்டின் இராணுவப்படைத் தளபதியாக முகமது அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படையின் 22 ஆவது தளபதியாக அப்துல் ரஹ்மானின் நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கட்டாயப் பணி ஓய்வின் அடிப்படையில் பணி ஓய்வுப்பெற்ற அஃபென்டி புவாங் கிற்கு பதிலாக முகமது அப்துல் ரஹ்மான் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 59 வயதான முகமது அப்துல் ரஹ்மான் ஆயுதப்படையில் இதற்கு முன்பு உயர் பதவிகளை வகித்தவர் ஆவார். அவரின் பதவியேற்பு சடங்கு, இன்று கோலாலம்பூர், விஸ்மா பெர்தஹன் னில் தற்காப்பு அமைச்சர் முகமட் ஹசான் முன்னிலையில் நடைபெற்றது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


