2023 ஆம் ஆண்டில் மூன்றாவது காலாண்டில் மலேசியாவில் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கை 33.5 மில்லியன் அல்லது 3 கோடியே 35 லட்சமாக அதிகரித்துள்ளது என்று புள்ளி விவர இலாகா அறிவித்துள்ளது.
இந்த மூன்றாவது காலண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை 1.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு மலேசியாவின் மக்கள் தொகை 32.9 மில்லயன் அல்லது 3 கோடியே 29 லட்சமாக இருந்தது என்று அவ்விலாகா சுட்டிக்காட்டியது.
ஆண்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 72 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சமாக இருந்தது. பெண்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெண்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 57 லட்சமாக பதிவாகியிருந்ததாக அவ்விலாகா தெரிவித்துள்ளது.








