அம்பாங்,பிப்.7
அம்பாங், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணி காதலியை உருட்டு கட்டையால் அடித்து காயப்படுத்திய ஆடவனை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஜனவரி 30 ஆம் தேதி காலை 8 மணியளவில் தலையிலும் கை கால்களிலும் ஏற்பட்ட பலத்த காயங்களினால் 29 வயதுடைய அப்பெண் செலாயாங் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற புகாரை அடுத்து இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்பாங் ஜெயா OCPD முஹமாட் அசாம் இஸ்மாயில் ஓர் அறிக்கையில் நேற்று தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் 34 வயதுடைய சந்தேகிக்கும் நபர் கம்போங் பாரு அருகில் கைது செய்யப்பட்டதாக முஹ்மாட் அசாம் கூறினார்.
போதைப்பொருள் உட்கொண்டு காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அந்நபர் கோபத்தில் கட்டையால் அப்பெண்ணை தாக்கியதாக அவர் விவரித்தார்.
குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் சந்தேகிக்கும் நபர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நான்கு நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் முஹமாட் அசாம் குறிப்பிட்டார்.








