Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அனைத்துலக நிறுவனங்களின் வர்த்தக விவகாரங்களில் மலேசியா தலையிடாது.
தற்போதைய செய்திகள்

அனைத்துலக நிறுவனங்களின் வர்த்தக விவகாரங்களில் மலேசியா தலையிடாது.

Share:

கோலாலம்பூர்-ரில் நடைபெற்றுவரும் 2024 ஆசிய தற்காப்பு சேவை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியில் பங்குக்கொண்டுள்ள எந்தவோர் அனைத்துலக நிறுவனங்களின் வர்த்தக விவகாரங்களில் மலேசியா ஒரு போதும் தலையிடாது என தற்காப்பு அமைச்சர் , டத்தோ ஶ்ரீ முகமது கலேட் நோர்டின் தெரிவித்தார்.

மலேசியா, வர்த்தகங்களை சுந்ததிரமாக மேற்கொள்ளக்கூடிய ஒரு நாடு. எந்தவோர் அனைத்துலக தொழில்துறையினரும், அவர்கள் சார்ந்த பொருள்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இங்கு ஏற்படுத்தி தரப்படுவதாக கூறினார்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தருவிக்கும் இரு அனைத்துலக நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட கண்காட்சியில், பங்கேற்றுள்ளதாகவும் அவற்றிற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டுமென பெர்சாத்து கட்சியின் அனைத்துலக பிரிவு தலைவர் டத்தோஶ்ரீ சைபுதீன் அப்துல்லா உள்பட சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அது குறித்து கருத்துரைத்த போது அக்கூற்றை முன்வைத்த கலீத் நோர்டின், இக்கண்காட்சி, குறிப்பிட்ட நாடுகளுக்கும் நிறுவனங்களும் சாதகமாகவோ கூடுதல் பலத்தையோ அளிக்கவில்லை என்றார்.

அதில் பங்கேற்றுள்ள நாடுகள், அவர்களது பாதுகாப்பு தொடர்பான நிபுணத்துவத்தையும் புதிய தொழில்நுட்பத்தையும் பகிர்ந்துக்கொள்வதற்கான ஒரு தளமாகவே அது அமைந்துள்ளதாக கலீத் நோர்டின் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்