Jul 28, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் ராஜா தொழிற்பேட்டையில் அமோனியா வாயு கசிந்தது  10 பேர் மருத்துமனையில் அனுமதி
தற்போதைய செய்திகள்

புக்கிட் ராஜா தொழிற்பேட்டையில் அமோனியா வாயு கசிந்தது 10 பேர் மருத்துமனையில் அனுமதி

Share:

ஷா ஆலம், செக்‌ஷன் 7, புக்கிட் ராஜா தொழிற்பேட்டை பகுதியில் . Jalan Keluli 1 இல் தொழிற்சாலை ஒன்றிலிருந்து அமோனியா வாயு கசிந்ததில், அதனை நுகர்ந்து இருக்கலாம் என்று நம்பப்படும் பத்து தொழிலாளர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அமோனியா கசிவு தொடர்பாக காலை 11.15 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினர் ஓர் அவசர அழைப்பை பெற்றதாக அதன் சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முஹமாட் ராசாளி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் வாயு கொள்கலனின் வால்வுவிலிருந்து அந்த நச்சு ரசாயனம் கசிந்துள்ளதாக நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட பத்து தொழிலாளர்களும் ஷா ஆலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related News