Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு

Share:

ஏசிபி அந்தஸ்தில் உள்ள தனது உயர் போலீஸ் அதிகாரியின் பணிக்கு இடையூறு விளைவித்ததுடன், அவரை கடுஞ்சொற்களால் திட்டியதாக இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

34 வயது கே. கோபி என்ற அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், கடந்த மே 5 ஆம் தேதி மதியம் 12.10 மணியளவில் கோலாலம்பூர், டாங் வாங்கி , மெனாரா 2 புக்கிட் அமான், மூன்றாவது மாடியின் டி6 பிரிவில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் உயர் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப போலீஸ் விசாரணை அறிக்கைக்கு விளக்கம் அளிக்கத் தவறியதுடன் ஏசிபி கைரில் அசுவாத் அப்துல் அஜீஸ் என்ற போலீஸ் அதிகாரியின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக இன்ஸ்பெக்டர் கோபிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை அல்லது 10 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் கோபி, குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்