Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

Share:

சுங்கை பட்டாணி, ஜூலை.28-

கெடா மாநிலம் சுங்கை பட்டாணி, புக்கிட் செலம்பாவ் பகுதியில் உள்ள ஒரு மர ஆலைக்கு, நேற்று காலை, கையெறி குண்டு போன்ற பொருளும், மிரட்டல் கடிதமும் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் வெளியிட்டுள்ள தகவலில், காலை 10 மணியளவில் ஆலையின் நுழைவாயிலில் அந்தப் பொருளும், மிரட்டல் கடிதமும் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெடிகுண்டு அகற்றும் பிரிவு சம்பவ இடத்துக்கு விரைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட பரிசோதனையில், கையெறி குண்டைப் போல் தோன்றிய அந்தப் பொருள் செயல்படாத ஒன்று என்பது தெரிய வந்துள்ளது.

அதேவேளையில், சிவப்பு மையால் மலாய் மொழியில் எழுதப்பட்டிருந்த மிரட்டல் கடிதத்தில், மர ஆலை தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்