Jun 16, 2026
Thisaigal NewsYouTube
ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

Share:

வாகன உரிமை மாற்றத்திற்கான இணையவழிச் சேவைகளை மீண்டும் தொடங்கவும், இவ்வார பிற்பகுதியில் மட்டுமே அச்சேவையை தற்காலிகமாக நிறுத்தவும் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே ஒப்புக்கொண்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜேபிஜே தலைமை இயக்குநர் எடி ஃபாட்லி ராம்லி உடன் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இணைய அமைப்பில் ஏற்பட்ட தவறான பயன்பாடுகளால் ஏற்பட்ட பல சிக்கல்கள் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக எடி ஃபாட்லி தம்மிடம் தெரிவித்ததாகவும் அந்தோனி லோக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அமைப்பு மேம்பாட்டுப் பணிகள் பொதுமக்களின் தினசரி செயல்பாடுகளை பாதிக்கக்கூடாது என்றும், ஜேபிஜே அலுவலகங்களில் அதிக நெரிசலை ஏற்படுத்தக்கூடாது என்றும் அந்தோனி லோக் அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, வாகன உரிமை மாற்ற இணைய சேவைகளை உடனடியாக மீண்டும் செயல்படுத்தப்படுவதற்கு ஜேபிஜே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News