Sep 26, 2026
Thisaigal NewsYouTube
கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

Share:

கோல திரெங்கானு கடற்கரையிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செப்பாட் மிதவைச் சேமிப்பு மற்றும் இறக்குதல் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் காரணத்தை கண்டறிய குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கோல திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமது நூர் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கானது தற்போது திடீர் மரணம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்செயல் தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால், வழக்கானது மறுவகைப்படுத்தப்பட்டு குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அஸ்லி முகமது நூர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related News