Sep 26, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

Share:

சிரம்பான், தாமான் துவாங்கு ஜபார், ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

புறத்தணிக்கையாளர் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் அனந்தன் செல்லையா அண்ட் அசோசியேட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஆனந்தன் செல்லையா முன்னிலையில் தேவஸ்தானத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தேவஸ்தானத்தின் கணக்கு வழக்குகள் மிகத்துல்லியமாக இருந்தது. சிறந்த நிர்வாகக் குழுவினரால் தேவஸ்தான நிகழ்வுகள் அனைத்தும் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் ஆதரவும் இதற்கு முக்கியக் காரணம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்தது.

இந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் மலேசிய இந்து சங்கத்தின் நெகிரி செம்பிலான் பேரவையின் தலைவர் சங்கபூஷனம் சிவஸ்ரீ டாக்டர் ஆனந்த் கோபி சிவச்சாரியார் மற்றும் மாநில செயலாளர் விவேக ரத்னா உமாசுதன் பெருமாள் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

Related News