Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா
தற்போதைய செய்திகள்

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

Share:

காசா மனிநேய உதவிகளுக்காக குளோபல் சுமூத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) 2.0 இயக்கத்தில் பங்கேற்ற மலேசிய செயற்பாட்டாளர்கள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்தியுள்ள தாக்குதல்களை மலேசிய அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேலிய சியோனிச ஆட்சியாளர்களை எதிர்த்து, அனைத்துல நீதிமன்றமான ஐசிஏ-வில் வழக்குத் தொடர மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது அவ்வழக்கிற்குத் தேவையான தகவல்களையும் ஆதாரங்களையும் வழக்கறிஞர்கள் சேகரித்து வரும் நிலையில், அப்பணிகள் நிறைவடைந்தததும் மலேசிய அரசாங்கம் சார்பில் அதிகாரப்பூர்வமாக வழக்குத் தொடுக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், நாடு திரும்பிய 28 மலேசிய செயற்பாட்டாளர்களையும் வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமிருடின் ஷாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கடத்தப்பட்ட மலேசிய செயற்பாட்டாளர்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டு இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related News