Sep 26, 2026
Thisaigal NewsYouTube
செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் “ஆர்டி6 கேங்” எனப்படும் குண்டல் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 11 ஆடவர்கள் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

22 முதல் 48 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவரும், நீதிபதி இஸ்ராலிஸாம் சனுசி முன்னிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டபோது, அதனைப் புரிந்துகொண்டதாக தலையசைத்தனர்.

எனினும், இந்த வழக்கானது, உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

அவர்கள் அனைவரும், கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜனவரி 14 முதல் இவ்வாண்டு ஏப்ரல் 27 -ஆம் தேதி வரை, செந்தூல் பகுதியில் செயல்பட்டு வந்த அக்கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாக, குற்றவியல் சட்டம் பிரிவு 130V(1) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இக்குற்றமானது நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News