Sep 27, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த பொதுத்தேர்தல் வரையில் பெர்லிஸ் அரசாங்கத்தில் மாற்றமில்லை - மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா தகவல்
தற்போதைய செய்திகள்

அடுத்த பொதுத்தேர்தல் வரையில் பெர்லிஸ் அரசாங்கத்தில் மாற்றமில்லை - மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா தகவல்

Share:

அடுத்த பொதுத் தேர்தல் வரையில் பெர்லிஸ் மாநில அரசு மாற்றமின்றி தொடரும் என பெரிகாத்தான் நேஷனல் மாநில தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து கடந்த திங்கட்கிழமை கூட்டணி தலைவர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில், தற்போதைய மாநில அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளதாக மாநில மந்திரி பெசார் அபு பக்கர் ஹம்சா தெரிவித்துள்ளார்.

மாநில பெரிகாத்தான் மற்றும் பாஸ் தலைமை வெளியிட்ட இந்த நிலைப்பாட்டை அவர் வரவேற்று, இது அரசின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வலுவான ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணியை பாதுகாக்க அவர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அபு பக்கர் ஹம்சா, தாங்கள் ஒருவரை ஒருவர் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒத்தி வைக்கப்பட்டுள்ள மாநில சட்டமன்றக் கூட்டத்திற்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News