Jul 1, 2026
Thisaigal NewsYouTube
உலக நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற நினைப்பது ஏன்?/ முகைதீனுக்கு சைபுடின் அப்துல்லா கேள்வி
தற்போதைய செய்திகள்

உலக நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற நினைப்பது ஏன்?/ முகைதீனுக்கு சைபுடின் அப்துல்லா கேள்வி

Share:

மத்திய கிழக்கு நெருக்கடியின் தாக்கம் குறித்து எதிர்க்கட்சிக் கூட்டணி கவலைகளை எழுப்பி வரும் வேளையிலும், எதிர்க்கட்சித் தலைவருக்கு மாற்றாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் பெர்சாத்து கட்சித் தலைவர் முகிதீன் யாசின் கவனம் செலுத்தி வருவதை, இந்திரா மக்கோத்தா நாடாளுமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், உலகளாவிய நெருக்கடியின் விளைவுகள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்சா ஜைனுடின் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்ததாக சைபுடின் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அமர்வு, நீடித்த வளைகுடா மோதல், குறிப்பாக எண்ணெய் விலை மற்றும் பணவீக்கத்தின் மீதான அதன் தாக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து விவாதிக்க அரசாங்கத்திற்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் உணவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த கவலைகள் போன்ற விவகாரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் உதாரணமாக மலாக்கா நீரிணைப் பகுதியில் உள்ள சூழல் போன்றது என்றும் சைபுடின் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவரை கூடிய விரைவில் மாற்றியமைக்க வேண்டும் என்பதில் முகிதீன் அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்றும் சைபுடின் தனது சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை