Jul 18, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

Share:

கோலாலம்பூர், ஜாலான் கெமுந்திங் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில், 49 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 9.55 மணியளவில் போலீஸ் துறைக்குக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலைக் கைப்பற்றினர்.

இதனை உறுதிப்படுத்திய டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் சாசலி ஆடாம், உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோலாலம்பூர் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இப்போதைக்கு இச்சம்பவம் 'திடீர் மரணம்' என வகைப்படுத்தப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சாசலி ஆடாம் குறிப்பிட்டார்.

Related News