Jul 18, 2026
Thisaigal NewsYouTube
பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை
தற்போதைய செய்திகள்

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில், தமக்குள்ள 4 மொழி ஆளுமைத் திறனை சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் முழுமையாகப் பயன்படுத்தி வருகிறார்.

தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சரான யுனேஸ்வரன், இதுகுறித்துக் கூறுகையில், தமக்கு பள்ளிப் பருவம் முதலே மலாய், தமிழ், சீனம் மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் உள்ள புலமை, பல்வேறு பின்னணியைக் கொண்ட வாக்காளர்களை மிக நெருக்கமாக அணுக பெரிதும் உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"பல்லின மக்களைக் கொண்ட நமது சமுதாயத்தோடு சுலபமாகத் தொடர்பு கொள்ளவும், நமது கூட்டணியின் கொள்கை மற்றும் செய்திகளை அவர்களிடம் மிகவும் துல்லியமாகக் கொண்டு சேர்க்கவும் இந்த மொழி ஆளுமை ஒரு சிறந்த பலமாக அமைந்துள்ளது" என்று தமது நாடாளுமன்றத் தொகுதியில் நடத்திய மக்கள் சந்திப்புக்குத் பிறகு அவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

ஜோகூர் மாநிலத் தேர்தல் குறித்துப் பேசிய அவர், கடந்த தேர்தலை விட இம்முறை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கான ஆதரவு அலை மிகவும் சாதகமாக இருப்பதாகத் நம்பிக்கை தெரிவித்தார். வாக்காளர்கள் தற்போது வேட்பாளர்களின் தகுதி, அவர்களின் சேவை மனப்பான்மை மற்றும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் திறன் ஆகியவற்றை வைத்தே தங்கள் வாக்குகளைச் செலுத்தத் தயாராகி வருவதாக யுனேஸ்வரன் மேலும் விவரித்தார்.

Related News