Jul 1, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு: 11 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு: 11 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்

Share:

கோலாலம்பூரில் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் முறியடித்ததில், 18 ஆடம்பர கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் ரோல்ஸ்-ராய்ஸ் மற்றும் போர்ஷே உள்ளிட்ட உயர்தர கார்களும் அடங்கும்.

மேலும் மெர்சிடிஸ்-பென்ஸ், லெக்சஸ், டொயோட்டா ஆல்ஃபார்ட், ஜி.டபிள்யூ.எம் மற்றும் வோக்ஸ்வேகன் போன்ற விலையுயர்ந்த கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் 11.05 மில்லியன் ரிங்கிட் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், 1.66 கிலோ எடையுடைய 27 நகைகள், 2.1 கிராம் எடையுடைய 3 தங்க கட்டிகள், 8 ஆடம்பர கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களுடன், 4.9 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, போதைப்பொருள் கும்பலானது, சட்டவிரோத பணத்தை பணமாற்று வணிகம் மூலம் சட்டபூர்வமாக்கி வந்தது தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 16 அன்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 7 பெண்கள் உட்பட மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை