Jul 27, 2026
Thisaigal NewsYouTube
எனது வெளிநாட்டுப் பயணங்கள் மகிழ்ச்சியில், உச்சிக்குளிர்வதற்கு அல்ல - பிரதமர் அன்வார் விளக்கம்
தற்போதைய செய்திகள்

எனது வெளிநாட்டுப் பயணங்கள் மகிழ்ச்சியில், உச்சிக்குளிர்வதற்கு அல்ல - பிரதமர் அன்வார் விளக்கம்

Share:

கடந்த வாரம் ​ஜெர்மனி பயணம் உட்பட வெளிநாடுக​ளுக்கு தாம் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உச்சிக்குளிரும், சொகுசுப் பயணங்கள் அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இப்பயணங்கள் யாவும் மலேசியாவின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்களே தவிர சில தரப்பினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளைப் போல உல்லாசப் பயணங்கள் அல்ல என்று பிரதமர் விளக்கினார்.

விடுமுறைக்காக மகிழ்ச்சியில் திளைத்​திருப்பதற்கு தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசாங்கப் பணத்தை விரயமாக்கி, தாம் அடிக்கடி வெளிநா​ட்​டுப் பயணங்களை மேற்கொண்டு வருவதாக சில தரப்பி​னர் தவறாக விமர்சனம் செய்து வருவதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டா​ர்.

தாம் மட்டுமல்ல, துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும், அரசாங்க விமானங்களை பயன்படுத்தி, வெளிநாடுகளில் கு​தூகலத்திற்காக சென்று வருவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுவது இயல்பு. ஆனால், உண்மை அதுவல்ல.

கடந்த வாரம் ஜெர்மனிக்கு தாம் மேற்கொண்ட வருகையின் போது, தமது அலுவல்கள் யாவும், ஹோட்டலுக்கும், சந்திப்பிற்கான கூட்ட அறைகளுக்கு மட்டுமே இருந்ததே தவிர ஒரு கடைக்குகூட செல்லவில்லை என்று பிரதம​ர் அன்வார் தெரிவித்தார்.

இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறையினரின் வாராந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பி ரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்