Mar 17, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரின் சடலம் மீட்பு, போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஆடவரின் சடலம் மீட்பு, போலீஸ் விசாரணை

Share:

பெத்தாலிங் ஜெயா,பிப்.7
ஷா ஆலம், செக்‌ஷன் 14 இல் உள்ள ஓர் ஏரியில் ஆடவர் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் தனது புலன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து இன்று காலை 8.20 மணியளவில் அந்த ஏரியிலிருருந்து ஆடவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரின் உடலில் எந்தவொரு ஆவணங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் யார் என்பது குறித்து அடையாளம் காண இயலவில்லை என்று இக்பால் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட ஆடவரின் உடலில் BCG தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. அவர் அந்நிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நேர்த்தியான உடை அணிந்திருந்த அந்த நபரின் உடலில் எந்தவொரு காயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இக்பால் இப்ராஹிம் மேலும் கூறினார்.

Related News