நாட்டில் பூமிபுத்ராக்களின் பொருளில் வளர்ச்சி நிலை தொடர்பாக புதிய அணுகுமுறையை கையாளுவதற்கு அடுத்த ஆண்டு ஐனவரி மாதம் பூமிபுத்ரா பொருளாதார மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
நியாயமான, சமமான பொருளாதார வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதற்கு தேவையான வியூக முறையை வகுப்பதற்கு இந்த மாநாடு களம் அமைத்துக்கொடுக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று நாடாளுமன்றத்தில் 12 ஆவது மலேசியத் திட்டத்தின் மத்திய கால மறு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.








