Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மோட்டார் சைக்கிள் விபத்தில் நான்காம் படிவ மாணவன் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மோட்டார் சைக்கிள் விபத்தில் நான்காம் படிவ மாணவன் பலி

ஷா ஆலாம், ஜூலை.05-

நான்காம் படிவ மாணவன் செலுத்திய மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை மோதி கீழே விழுந்ததில் கடும் காயங்களுடன் உயிரிழந்தார்.

இத்துயரச் சம்பவம் நேற்று இரவு 9.35 மணியளவில் ஷா ஆலாம், செக்‌ஷன் 13 இல் பெர்சியாரான் சுக்கான் சாலைப் பிரிவில் நிகழ்ந்தது. கடுமையான காயங்களுடன், அந்த மாணவர், சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த அவரின் நண்பர் காயங்களுக்கு ஆளாகினார்.

16 வயதுடைய அந்த மாணவர், ‌ஷா ஆலாம், செக்‌ஷன் 9 இல் உள்ள தேசிய இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் கூறப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →