Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பதின்ம வயதுடையவர்கள் அதிகம் மின் சிகரெட்டை பயன்படுத்தி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

பதின்ம வயதுடையவர்கள் அதிகம் மின் சிகரெட்டை பயன்படுத்தி வருகின்றனர்

Share:

கடந்த இரண்டு வருடங்களில் பதின்ம வயதுடையவர்களுக்கு vape என்கின்ற மின் சிகரெட்டை விற்பனை செய்த குற்றத்திற்காக மொத்தம் 28 நோட்டீஸ்களை மலேசிய சுகாதார அமை‌ச்சக‌ம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, கடந்த ஆண்டு மட்டுமே 26 நோட்டீஸ்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் இவ்வாண்டு இதுவரையில் இரண்டு நோட்டீஸ்கள் வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.

13 முதல் 17 வயதுடையவர்களை உள்ளடக்கிய மின் சிகரெட்டின் பயன்பாடு அதிகரித்து வருவதை தேசிய நோயுற்ற சுகாதார ஆய்வு காட்டுகிறது என்பதை அனைத்து தரப்பினரும் அறிந்திட வேண்டும் என்று Dr Dzulkefly வலியுறுத்தினார்.

மின் சிகரெட்டின் பயன்பாடு இளையோர்களிடம் அதிகரித்து வருவதன் முக்கிய காரணம் என்னவென்றால் அதன் தயாரிப்பு தன்மை பெருமளவில் கவரப்படுவதால் மட்டுமே என்று Dr Dzulkefly சுட்டிக் காட்டினார்.

அதுமட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் எந்தவொரு கட்டுப்பாடின்றி அதன் தயாரிப்பின் பரவலான விளம்பரமும் அடங்கும் என்று அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.

இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 852 ஆவது பிரிவிவை அமல்படுத்துவதற்கான உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற வேளை, இவ்வாண்டு நடுப்பகுதியில் இது அமலுக்கு வரவிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி