Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களுக்கான உதவித்திட்டங்கள் குறித்து இந்திய சமூகத்தினர் ஆதங்கம் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்களுக்கான உதவித்திட்டங்கள் குறித்து இந்திய சமூகத்தினர் ஆதங்கம் வேண்டாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 02-

இந்திய சமூகத்தினரை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்துவதற்காக, ஒற்றுமை அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அது இந்தியர்களை நடப்பு அரசாங்கம் ஒரு போதும் புறக்கணிக்காததை காட்டுவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

எந்தவொரு சமூகத்தினருக்கும் உதவுவதில் பாகுப்பாடு பார்க்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது. குறிப்பாக, பூமிபுத்ராக்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்த போதிலும் இந்திய சமூகத்தினரை ஒதுக்கி வைப்பதாக பொருள்படாது என்றார் பிரதமர்.

ஆகவே, பூமிபுத்ராக்களுக்கு உதவக்கூடிய திட்டங்கள் மீது இந்திய சமூகத்தினர்கள் ஆத்திரமோ அல்லது பொறாமையோ கொள்வது சரியல்ல.

பல ஆண்டுகளாக இந்திய சமூகத்தினர் குடியுரிமை பிரச்னையை எதிர்நோக்கிவரும் நிலையில், முதல்முறையாக, தமது தலைமையிலான அரசாங்கம், உள்துறை அமைச்சின் மூலம் அவர்களின் அப்பிரச்னைகளுக்கு அதிகம் தீர்வுக்கண்டுள்ளது என்று பிரதமர் அன்வார் கூறினார்.

மேலும், இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப்பிரிவான மித்ராவுக்கு 100 மில்லியன் வெள்ளி, தெக்குன் கடனுதவி வாயிலாக 30 மில்லியன் வெள்ளி, மலேசிய அமானா இக்தியார் வாயிலாக 50 மில்லியன் வெள்ளி சிறப்பு நிதி என பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அது தவிர, பெட்ரோனாஸ்-சின் உபகாரச் சம்பளமும், அதில் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் அன்வார் அறிவித்தார்.

இந்திய சமூகத்திற்கு அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என தங்களின் சுயநலத்துக்காக சில தரப்பினர், பரப்பிவரும் அவதூறுகளை இந்திய சமூகத்தினர் நம்பக்கூடாது எனவும் நேற்று ஒளிபரப்பட்ட பிரதமருடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பிரதமர் அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்