அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள "Menu Rahmah" எனும் 5 வெள்ளி உணவு முறை, B40 பிரிவை சேர்ந்தவர்கள் மாதம் ஒன்றுக்கு சராசரி 100 வெள்ளியை சேமிக்கும் அளவிற்கு உதவி வருவதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் Salahuddin Ayub தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கப்பட்ட "Menu Rahmah" உணவு முறை, நாடு முழுவதும் உள்ள சங்கிலி தொடர்புடைய உணவகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சாமானிய மக்கள் வழங்கி வரும் ஆதரவு காரணமாக பேரங்காடிகளான Mydin, 99 Speedmart, Lotus மற்றும் AEON Big போன்றவையும் நல்லாதரவை வழங்கி வருவதாக Salahuddin Ayub குறிப்பிட்டுள்ளார்.








