Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மண்வாரி இயந்திரத்தின் டயர் வெடித்து, தொழிலாளர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மண்வாரி இயந்திரத்தின் டயர் வெடித்து, தொழிலாளர் உயிரிழந்தார்

Share:

சுங்காய் பூலோ, மே 03-

சிலாங்கூர், சுங்காய் பூலோவில் TYRE பழுதுபார்க்கும் மையம் ஒன்றில், மண்வாரி இயந்திரத்தின் டயரில் தொழிலாளர் ஒருவர் காற்றை நிரப்பிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அது திடிரென வெடித்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அச்சம்பவத்தைக் குறித்து புகைப்படத்துடன் கூடிய ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் நிலையில், சுங்காய் பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டன் முகமது ஹபீஸ் முஹம்மது நோர் அதனை உறுதிபடுத்தினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 12.40 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 19 வயது தொழிலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, தலையில் கடும் காயத்திற்கு இலக்காகியிருந்த 20 வயதுடைய மற்றொரு தொழிலாளி, சுங்காய் பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதுவொரு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டதாக கூறிய ஹபீஸ் முஹம்மது, அது தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்