Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கொலை செய்யப்பட்ட நிலையில் ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

கொலை செய்யப்பட்ட நிலையில் ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது

Share:

காப்பார், ஏப்ரல் 26-

சிலாங்கூர், காப்பார், தாமான் ஜெயா- வில் உள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கும் ஆடவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 11.39 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக வடக்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்தடைந்த போது 38 வயது உள்ளூர் ஆடவர் சுயநினைவற்ற நிலையில் படுக்கறைக்கு முன் இறந்து கிடப்பதை கண்டறியப்பட்டதாக விஜய ராவ் கூறினார்.

சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனையிட்ட போது நான்கு பேர் கத்திகள் மற்றும் டேசர் துப்பாக்கியுடன் அவ்வீட்டினுள் நுழைந்திருப்பது காணப்பட்டதாக அவர் விளக்கினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் காரணத்தை கண்டறிய போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருவதாக விஜய ராவ் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்