மலாக்கா, அலோர் காஜா, பெர்ச்சா வனப்பகுதியில் எரித்துக்கொல்லப்பட்ட நபர், தனது மகன் டர்வின்ராஜ் என்று தாயார் வத்மா தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் காணாமல் போன தனது 24 வயது மகனின் மரணம் தொடர்பில் போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்ற போதிலும் அது தொடர்பாக சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு காணொளியில் அடித்துக் கொல்லப்பட்டவர் தனது மகன் டர்வின்ராஜ்தான் என்று 55 வயதான தாயார் வத்மா குறிப்பிட்டுள்ளார்.
தமது மகன் மூன்று தனிநபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் வத்மா தெரிவித்தார். படம் பார்ப்பதற்காக தனது மகன் டர்வின் ராஜ கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தேதி தனது 17 வயது மகனுடம் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று வத்மா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நடக்கும் போது கோலாலம்பூரில் ஒரு சமய நிகழ்வில் கலந்து கொண்டதாகவும், தமது அனுமதியுடன்தான் தனது மகன் வெளியே சென்றதாகவும் வத்மா குறிப்பிட்டுள்ளார்.








