Oct 10, 2026
Thisaigal NewsYouTube

முன்னாள் தொலைக்காட்சி பிரபலத்திற்கு 4,800 ரிங்கிட் அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முன்னாள் தொலைக்காட்சி பிரபலத்திற்கு 4,800 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், ஜூன்.10-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோலாலம்பூர், தாமான் யு தாண்ட்டில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நுழைவாயில் தடுப்புச் சட்டம் மற்றும் ரகசிய கேமராவை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தி, நாசவேலை புரிந்த குற்றத்திற்காக முன்னாள் தொலைக்காட்சி பிரபலமான பெண்மணி ஒருவருக்கு 4 ஆயிரத்து 800 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து, விசாரணை கோரி வந்த 45 வயது நோர்ஜுமா ஹபிப் முகமட் என்ற அந்த பிரபலம், இன்று குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிப்பதாக மாஜிஸ்திரேட் ஃபாரா நபிஹா முகமட் டான் தீர்ப்பு அளித்தார்.

அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 5 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக ஃபாரா நபிஹா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு