Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையை காக்கவே போ​லீ​ஸ் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையை காக்கவே போ​லீ​ஸ் நடவடிக்கை

Share:

அரச பரிபாலனத்தை அவமதிக்கும் வகையிலான அறிக்கைகளை வெளியிடும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது அந்த உயரிய பரிபாலனத்தின் இறையாண்மையை பாதுகாக்கவே என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் எல்லைக்கு அப்பால் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு நியாயம் வழங்குவதற்காகவே இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஆட்சியாளர்களை அரசியல் களத்தில் இழுப்பது பொருத்தமற்றது என்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

ஆட்சியாளர்களின் விவகாரத்தை தொட்டா​​ல் அவர்களுக்கு ​நியாயம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் முடிவாகும். காரணம், தங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு விமர்சனம் குறித்து ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க இயலாது. அதேபோன்று அவர்கள், ஊடகங்களிலும், சாதாரண விவாதங்களிலும் அது குறித்து பேசவோ பதில் அளிக்கவோ முடியாது என்று பிரதமர் விளக்கினார்.

ஆட்சியாளர்களை அரசியல் அரங்கிற்கு இழுக்கக்கூடாது என்பது குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போ​லீஸ் துறைக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்க​த்தையும், பிரதமரையும் விமர்ச்சிக்க முடியும். அதற்கு தேச நிந்தனை சட்டம், நிச்சயம் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படாது என்பதற்கு தாம் உறுதி கூறுவதாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

ஆனால், இதே அளவுக்கோலை ஆட்சியாளர்களின் விவகாரத்தில் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை என்பதுதான் நடப்பு உண்மையாகும் என்று பிரதமர் விளக்கம் அளித்தார்.

Related News