Sep 7, 2026
Thisaigal NewsYouTube
லஞ்ச வழக்கில் நடிகை ஸிஸி விடுவிப்பு: அரசுத் தரப்பு மேல்முறையீடு
தற்போதைய செய்திகள்

லஞ்ச வழக்கில் நடிகை ஸிஸி விடுவிப்பு: அரசுத் தரப்பு மேல்முறையீடு

Share:

முன்னாள் கினபாத்தாங்கான நாடாளுமன்ற உறுப்பினரும் தமது கணவருமான பூங் மொக்தார் ராடின், - னுடன் கூட்டாக லஞ்ச ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட நடிகை ஸிஸி இஸட் அப்துல் சமத் -டை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

சபா முன்னாள் அம்னோ தலைவரான மறைந்த புங் மொக்தார் ராடின் 28 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதில் உடந்தையாக இருந்ததாக நடிகை ஸிஸி இஸெட் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கடந்த ஜூலை 20ஆம் தேதி, அரசுத் தரப்பு வழக்கில் நியாயமான சந்தேகம் எழுப்புவதில் தற்காப்புத் தரப்பு வெற்றி பெற்றதாகக் கூறி, செஷன்ஸ் நீதிமன்றம் அவரை விடுவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கடந்த ஜூலை 31ஆம் தேதி அரசுத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. வழக்கு நிர்வாக விசாரணை நாளை நடைபெறுகிறது.

இதற்கிடையே, பெல்க்ரா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புங் மொக்தார் மீது சுமத்தப்பட்டிருந்த 28 லட்சம் ரிங்கிட் லஞ்ச வழக்குகள், அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து கைவிடப்பட்டன.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

லஞ்ச வழக்கில் நடிகை ஸிஸி விடுவிப்பு: அரசுத் தரப்பு மேல்மு... | Thisaigal News