Aug 18, 2026
Thisaigal NewsYouTube
மிகவும் ‘பாவம்’ செய்யும் தளம் முகநூல் !” — சூதாட்டம், மோசடியில் முதலிடம்
தற்போதைய செய்திகள்

மிகவும் ‘பாவம்’ செய்யும் தளம் முகநூல் !” — சூதாட்டம், மோசடியில் முதலிடம்

Share:

மலேசியர்களுக்கு எதிராக அதிக ‘பாவம்’ செய்யும் சமூக ஊடகத் தளம் எது? — முகநூல் தான் என்கிறார் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில்! ஆன்லைன் சூதாட்டம் மற்றும் மோசடி உள்ளடக்கங்களை அகற்றுவதில் முகநூல் அதிகம் பிரச்சினைக்குரிய தளமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட உள்ளடக்கங்களில் 78 விழுக்காடும், மோசடி உள்ளடக்கங்களில் 53 விழுக்காடும் முகநூல்-கில் இருப்பதாக ஃபஹ்மி கூறினார். சூதாட்ட உள்ளடக்கத்தில் 18 யூடியூப் விழுக்காடும், டிக்டாக் 4 விழுக்காடும் பதிவாகியுள்ளன. மோசடி உள்ளடக்கத்தில் டிக்டாக் 39 விழுக்காடும், த்ரெட்ஸ் 5 விழுக்காடும் உள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 17 வரை, தீங்கு விளைவிக்கும் 4 லட்சத்து 70 ஆயிரத்து 593 உள்ளடக்கங்களை அகற்றுமாறு அரசாங்கம் சமூக ஊடகத் தளங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதில் 93 விழுக்காடு, அதாவது 4 லட்சத்து 36 ஆயிரத்து 661 உள்ளடக்கங்களை அகற்ற தளங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

அகற்றக் கோரப்பட்டவற்றில் 64 விழுக்காடு சூதாட்டமும், 27 விழுக்காடு மோசடியும் என ஃபஹ்மி தெரிவித்தார்.

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து, தடுத்து, உடனடியாக அகற்ற சமூக ஊடகத் தளங்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News