வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 268 ஆவது கிலோ மீட்டரில் ஈப்போவிற்கு அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, லோரியின் பின்புறம் மோதி, விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவரில் மூவர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்தது
20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரு ஆண்களும், ஒரு பெண்ணும் இவ்விபத்தில் கடுமையாக காயமுற்று EMRS வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்கத் தலைவர் Mahmud Azaddin தெரிவித்தார்.
அந்த Mercedes காரில் பயணித்தவர்களில் இருவர் சொற்ப காயங்களுக்கு ஆளானார்கள். காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீட்புப்படையினர் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தியதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.








