Nov 20, 2025
Thisaigal NewsYouTube
கெடா  அரசுக்கு வாடகையோ, இழப்பீடோ கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை: பினாங்கு முதலமைச்சர் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

கெடா அரசுக்கு வாடகையோ, இழப்பீடோ கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை: பினாங்கு முதலமைச்சர் திட்டவட்டம்

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.20-

பினாங்கு மாநிலம், கெடாவிற்குs சொந்தம் என்று அந்த மாநிலத்தின் மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் கூறி வரும் வேளையில் கெடா அரசுக்கு பினாங்கு மாநிலம், வாடகையோ, இழப்பீடோ கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை என்று மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.

பினாங்கு மாநிலம், மலேசிய கூட்டரசில் இடம் பெற்றுள்ள ஒரு மாநிலமாகும். அதன் நிலை இதுவரை சர்ச்சை செய்யப்படவில்லை. இது கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 12 ஆவது விவகாரத்தில் தெளிவாக உள்ளது என்று சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.

கெடா அரசுக்கு பினாங்கு மாநிலம் கட்டாயம் வாடகை அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விவகாரம் மாநில அரசாங்க அளவில் எழவே இல்லை. காரணம், அதற்கான பொறுப்பும், கடமையும் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. வரலாறும், சட்ட அம்சங்களும் அவற்றை நிரூபிக்கின்றன என்று சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

1869 ஆண்டில் பிரிட்டிஷாருக்கும், கெடாவிற்கும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் கூட்டரசு அரசிலமைப்புச் சட்டம் 167, 169 ஆகிய விதிகளின் கீழ் உள்ள விவகாரங்களும், பிரிட்டிஷாரின் நிர்வாகத்தில் வழங்கப்பட்ட இழப்பீட்டு கடப்பாடும் தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ளது என்று சோவ் கோன் யோவ் தெளிவுபடுத்தினார்.

இன்று பினாங்கு சட்டமன்றக்கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரான சோவ் கோன் யோவ் மேற்கண்ட விளக்கத்தை அளித்தார்.

Related News