Jun 16, 2026
Thisaigal NewsYouTube
இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு: இரு படைவீரர்கள் பலி - மாமன்னர் ஆழ்ந்த இரங்கல்
தற்போதைய செய்திகள்

இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு: இரு படைவீரர்கள் பலி - மாமன்னர் ஆழ்ந்த இரங்கல்

Share:

கெடா, குருன் பகுதியில் உள்ள ஹோபார்ட் இராணுவ முகாமின் பயிற்சி மைதானத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பயிற்சியின் போது காலை 10.57 மணியளவில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் பலத்த காயமடைந்த கொப்ரல் நோரஸ்மி அபு பக்கர் மற்றும் பிரைபெட் சித்தி கதீஜா சுங்கிப் ஆகிய இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் துணிச்சலையும் ஆறுதலையும் வழங்கிய மாமன்னர், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் பலப்படுத்தவும் மலேசிய ஆயுதப்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related News