Jul 16, 2026
Thisaigal NewsYouTube
இராணுவ முகாம் குண்டுவெடிப்பு: சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற போலீஸ் முடிவு
தற்போதைய செய்திகள்

இராணுவ முகாம் குண்டுவெடிப்பு: சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற போலீஸ் முடிவு

Share:

கெடா, குருன் ஹோபார்ட் இராணுவ முகாமில் இரு படைவீரர்கள் பலியாவதற்குக் காரணமான குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து, அங்கிருந்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான், இச்சம்பவம் குறித்து 'திடீர் மரணம்' என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தவும், உண்மை நிலையைக் கண்டறியவும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு நாடப்படும் என்றும் அவர் கூறினார்.

இராணுவத்தின் கனரக ஆயுதப் பயிற்சியின் போது நிகழ்ந்த இந்த வெடிவிபத்தில் கொப்ரல் நோரஸ்மி அபு பக்கர் மற்றும் சித்தி கதீஜா சுங்கிப்ஆகிய இருவர் படுகாயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்