Jun 16, 2026
Thisaigal NewsYouTube
நீர் பூங்காவில் விழுந்து 4 வயது சிறுவன் பலி: சுங்கை பூலோ போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

நீர் பூங்காவில் விழுந்து 4 வயது சிறுவன் பலி: சுங்கை பூலோ போலீஸ் விசாரணை

Share:

சுங்கை பூலோவில் உள்ள நீர் விளையாட்டுப் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

குளத்தில் தவறி விழுந்ததாகக் கருதப்படும் நிலையில், அச்சிறுவன், உடனடியாக சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். எனினும், அங்கு அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவத்தில் இதுவரை எந்தவொரு குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்றும், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடர்வதாகவும் சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹஃபீஸ் தெரிவித்துள்ளார்.

Related News