Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தொடர்புத்துறை அமைச்சு காரணம் அல்ல
தற்போதைய செய்திகள்

தொடர்புத்துறை அமைச்சு காரணம் அல்ல

Share:

உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு தரவரிசையில் மலேசியா 34 இடங்கள் சரிந்து, 107 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு தமது தலைமையிலான தொடர்புத்துறை அமைச்சு காரணம் அல்ல என்று அதன் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் விளக்கம் அளித்துள்ளார்.

சில விவகாரங்களில் வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் உள்ள சட்டங்கள் மற்றும் மலேசியாவின் நிலைப்பாடு ஆகியவை இந்த பின்னடைவு நிலைக்கு ஒரு காரணமாகம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

உதாரணத்திற்கு திருநங்கை, திருநம்பி முதலியோர் விவகாரங்களில் மலேசியாவின் நிலைப்பாடு என்ன என்பது நன்கு தெரியும். இதேபோன்று ஆசியான் மற்றும் கிழக்கித்திய நாடுகளின் சில விவகாரங்களில் மலேசியாவின் நிலைபாடும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கூறினார்.

ஆர்.எஸ்.ஃப் எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் என்ற அனைத்துலக ஊடக கண்காணிப்பு அமைப்பு, 2024 ஆம் ஆண்டுக்கான 180 நாடுகளின் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டதில் கடந்த ஆண்டு 73 ஆவது இடத்தில் இருந்த மலேசியா 34 இடங்கள் சரிந்து 107 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்திருப்பது தொடர்பில் ஃபாமி ஃபட்சில் எதிர்வினையாற்றினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்