May 22, 2026
Thisaigal NewsYouTube
குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் 5 குண்டர் கும்பல்களை சேர்ந்தவர்கள்
தற்போதைய செய்திகள்

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் 5 குண்டர் கும்பல்களை சேர்ந்தவர்கள்

Share:

கிள்ளான், மே 29-

கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சொஸ்மா சட்டத்தின் கீழ் இன்று குற்றஞ்சாட்டப்பட்ட 20 நபர்கள், 5 குண்டர் கும்பல்களை உள்ளடக்கிய TR கும்பலை சேர்ந்தவர்கள் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குர் டத்தோஸ்ரீ முகமட் சுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.

08,18,21,24 மற்றும் 36 ஆகிய ஐந்து குண்டர் கும்பல்களை உள்ளடக்கியதுதான் இந்த TR கும்பல் என்று டத்தோஸ்ரீ முகமட் சுஹைலி குறிப்பிட்டார்.

இந்த கும்பல், போதைப்பொருள் கடத்தல், கொலை, மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல்வேறு கடுங்குற்றச்செயல்களில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.

OPS LIMA என்ற பெயரில் கடந்த மே 3 ஆம் தேதி தொடங்கப்பட்ட போலீசாரின் சிறப்பு சோதனை நடவடிக்கையில் சொஸ்மாவின் கீழ் இந்த 20 பேரும் பிடிபட்டனர்.

தற்போது சுங்கை பூலோ சிறைச்சாலையில் மேலும் மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த TR கும்பலைச் சேர்ந்தகள் என்பது தெரியவந்துள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் இன்று காலையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ முகமட் சுஹைலி இதனை தெரிவித்தார்.

இவர்களுடன் சேர்ந்து பிடிபட்ட ஒரு சந்தேகப் பேர்வழி, கோலாலம்பூர் இருதய சிகிக்கை கழமான IJN – னில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் மேலும் பத்து பேரை தாங்கள் தீவிரமாக தேடி வருவதாக டத்தோஸ்ரீ முகமட் சுஹைலி குறிப்பிட்டார்.

தேடப்பட்டு வரும் அந்த பத்து பேரையும் தாங்கள் அடையாளம் கண்டு விட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News