ஜப்பானுக்குப் போதைப்பொருள் கடத்திச் செல்ல, மலேசியர்கள் ஐவருக்கும் தலா 8,000 ரிங்கிட் வழங்குவதாக போதைப்பொருள் கும்பல் ஆசை காட்டியிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருளை எடுத்துச் செல்ல அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது. சரவாக்கைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும், அவருடன் மனைவி மற்றும் மூன்று நண்பர்கள் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தெரிவித்த புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான், வெளிநாட்டுப் பயணங்களின்போது மற்றவர்கள் வழங்கும் காலணிகள், பைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.








