Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நீரில் அடித்துசெல்லப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

நீரில் அடித்துசெல்லப்பட்ட மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்

Share:

பெசுட், ஏப்ரல் 23-

தெரெங்கானு, பெசுட், ஜெர்டிஹ்-வில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயினுள் விழுந்த மோட்டார்சைக்கிளோட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

நேற்றிரவு மணி 8 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், உயிழந்தவர் பொருள் அனுப்புநரான 24 வயது வான் முஹம்மது குசாயிமி அபு செபியன் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது, அவ்வாடவர் கம்போங் கெராய் துவா-விலுள்ள தமது வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்த நிலையில், அவர் செலுத்திய யமஹா Ego LC ரக மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலது புறத்திலுள்ள கால்வாயினுள் பாய்ந்தது.

கால்வாயினுள் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், விழுந்த பகுதியிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் நீரில் அடித்து செல்லப்பட்டதாக, பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.

சம்பவ இடத்திலேயே பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்ட வேளை, சடலம் உடற்கூறு ஆய்வுக்காக பெசுட் மருத்துவமனைக்கு அனுப்பட்டதாகவும் அப்துல் ரோசாக் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்