Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு இடைத்தேர்தல் வருகின்ற மே 11
தற்போதைய செய்திகள்

கோல குபு பாரு இடைத்தேர்தல் வருகின்ற மே 11

Share:

சிலாங்கூர், ஏப்ரல் 04-

சிலாங்கூர் மாநிலத்தின் கோல குபு பாரு தொகுதியின் இடைத் தேர்தல் வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 27 ஆம் தேதியும் முன்கூட்டியே வாக்களிப்பு மே 7 ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் காணி சல்லெஹ் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரான 58 வயது லீ கீ ஹியோங் புற்றுநோயின் காரணமாக மார்ச் 21 ஆம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இது ஏழாவது இடைத்தேர்தலாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வாக்குச்சாவடி மையங்களை உள்ளடக்கிய 74 சேனல்கள் அமைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில் இரண்டு வாக்குப்பதிவு மையங்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் செயல்முறைக்கு தயார்ப்படுத்தப்பட்டிருக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்