Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மூன்றாவது மாடியிலிருந்து கார் விழுந்தது: கார் கழுவும் பணியாளர் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்றாவது மாடியிலிருந்து கார் விழுந்தது: கார் கழுவும் பணியாளர் படுகாயம்

கோலாலம்பூர், ஜூன்.16-

கார் ஒன்று, கட்டடத்தின் மூன்றாவது மாடியில் சுவரில் மோதி கீழே விழுந்ததில் கார் கழுவும் பணியாளர் ஒருவர் படுகாயத்திற்கு ஆளானார்.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று மாலை 5.38 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் விசாரணைப் பிரிவின் தலைவர் ஏசிபி ஸம்ஸூரி இசா தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்தக் காரைச் செலுத்திய ஆப்கானிஸ்தான் பிரஜையான 23 வயது நபர் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.

தனது வாடிக்கையாளருக்குச் சொந்தமான டொயோட்டா கெம்ரி காரைச் செலுத்திய போது, அவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →