Mar 17, 2026
Thisaigal NewsYouTube
விஷப்பாம்புகள் இருக்கலாம். கவனம் தேவை
தற்போதைய செய்திகள்

விஷப்பாம்புகள் இருக்கலாம். கவனம் தேவை

Share:

நாடு முழுவதும் கோடை வெப்பம் கொளுத்தத் தொடங்கியிருப்பதால் வெயிலின் தாக்கத்தினால் விஷப் பாம்புகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
தங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யும் மக்கள் விஷப் பாம்புகளிடமிருந்து மிகுந்த எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள புதர்களில் இருள் நிறைந்த குளிர்ச்சியான இடங்களை இருப்பிடமாக கொண்ட விஷப்பாம்புகள் வெயிலின் தாக்கத்தினால் குளிர்ச்சியை நோக்கி அல்லது தண்ணீரைத் தேடி படையெடுக்கும் சாத்தியம் இருப்பதாக பொது தற்காப்பு படை தலைமையக பயிற்சி நிர்வாகப்பிரிவு இயக்குநர் ஃபஸ்லிஷா முஸ்லிம் தெரிவித்துள்ளார்.

வெயில் காலத்தில் விஷப்பாம்புகளின் மிரட்டல் அதிகமாக இருப்பதால் வீடுகளின் சுற்றுப்புறம், கிடங்கு, கழிப்பறை, வீட்டு அறைகளை சுத்தம் செய்கின்றவர்கள் கவனமாக செயல்படுவது இன்றியமையாததாகும் என்று ஃபஸ்லிஷா முஸ்லிம் குறிப்பிட்டார்.

Related News