Jul 29, 2026
Thisaigal NewsYouTube
புலன் விசாரணை அதிகாரிக்கு தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

புலன் விசாரணை அதிகாரிக்கு தடுப்புக்காவல்

Share:

போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வந்த மாது ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள போலீஸ் புலன் விசாரணை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் கிளந்தான், தும்பாட் மாவட்ட போலீஸ் நியைத்திற்கு புகார் கொடுக்க வந்த தன்னை, விசாரணை அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்ததாக சம்பந்தப்பட்ட மாது கொடுத்த புகாரின் அடிப்படையில் 38 வயதுடைய அந்த இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று தும்பாட்டில் மாஜிஸ்திரேட் Wan Ashrul Afham Mohamad Azmi முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த இன்ஸ்பெக்டர், விசாரணைக்கு ஏதுவாக அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. .

Related News