Jul 16, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ மேல்நிலைப் பள்ளி  கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த 13 வயது மாணவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஈப்போ மேல்நிலைப் பள்ளி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த 13 வயது மாணவர் படுகாயம்

Share:

ஈப்போவில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில், 13 வயது மாணவர் ஒருவர் நேற்று கட்டிடத்திலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் படுகாயமடைந்து, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து பேராக் மாநில போலீஸ் தலைவர் அல்வி ஜைனல் ஆபிதீன் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று பிற்பகல் 2.49 மணியளவில் அவசர உதவி அழைப்பு மையம் வழியாக இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படுகாயங்களுக்குள்ளான அம்மாணவர் மீட்கப்பட்டு, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News