Jul 10, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்தில் துர்கை சிலை திருட்டு / 56 வயது பெண்ணை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்தில் துர்கை சிலை திருட்டு / 56 வயது பெண்ணை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

Share:

பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் சிலை ஒன்றை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயதான பெண்ணுக்கு மனநல மதிப்பீடு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ் சானுதேவி என்ற அப்பெண், நேற்று ஜார்ஜ் டவுன் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த ஜூன் 15 ஆம் தேதி காலை 6.15 மணியளவில், ஆலய வளாகத்திலிருந்து துர்கை அம்மன் சிலையை எஸ் சானுதேவி திருடியதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 380-இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

எனினும், அவரது வழக்கறிஞர் என் செல்வராணி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனநல மருத்துவ அறிக்கையில், சானுதேவிக்கு பைபோலார் டிஸார்டர் எனப்படும் மனநலக் கோளாரு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குற்றச்சாட்டுக்கான ஒப்புதல் அல்லது மறுப்பு பதிவு செய்யப்படாமல், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை, மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அவரது மனநிலையை மதிப்பீடு செய்வதற்காக அவரை பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்