Jul 18, 2026
Thisaigal NewsYouTube
கோல சிலாங்கூரில் பராமரிப்பு பணியாளர் உயிரிழந்த விபத்து: ஸ்பான் விசாரணை
தற்போதைய செய்திகள்

கோல சிலாங்கூரில் பராமரிப்பு பணியாளர் உயிரிழந்த விபத்து: ஸ்பான் விசாரணை

Share:

கோல சிலாங்கூரில் உள்ள சௌஜானா 1 நீர்த்தேக்கக் கோபுரத்தில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி நிகழ்ந்த பராமரிப்பு பணியாளர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய நீர் சேவைகள் ஆணையமான ஸ்பான் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக ஸ்பான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவத்தில் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய எந்தத் தரப்பினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஆயர் சிலாங்கூர் அல்லது ஸ்பான் வழங்கிய அனுமதிப் பத்திரம் இல்லாமல் பணிகளை மேற்கொண்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இந்த உயிரிழப்பு சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறியும் நோக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Related News