Sep 25, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து - உயிரிழப்புகள் இருக்கலாம் என அச்சம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் கோர விபத்து - உயிரிழப்புகள் இருக்கலாம் என அச்சம்

Share:

ஜோகூர் மாநிலத்தில் உள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் பாதையில், செடெனாக் மற்றும் குலாய்இடையிலான கி.மீ. 31.8 பகுதியில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் பல லாரிகள் மற்றும் கார்கள் தீப்பற்றி எரிந்தன.

இந்த கோர விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இருப்பினும், உயிரிழந்தோர் எண்ணிக்கை மற்றும் விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.

சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், பல கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் தீயில் முழுமையாக சிக்கி எரிவதைக் காண முடிகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்பு மற்றும் அவசர உதவி பணிகளும் சம்பவ இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related News